சதுரகிரி மலையில் கட்டுக்குள் வந்த காட்டு தீ - பக்தர்களுக்கு பாதிப்பு?

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பற்றி எறிந்து வரும் காட்டுத்தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மலை மீது சிக்கிக்கொண்ட பக்தர்கள் கீழே வரத்தொடங்கி உள்ளனர்.

First Published Jul 18, 2023, 10:54 AM IST | Last Updated Jul 18, 2023, 10:54 AM IST

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு நாவல் ஊத்துப் பகுதியில் 2வது நாளாக காட்டு தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி எறிந்து வருகிறது. நேற்று ஆடி அமாவாசை என்பதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் கீழே இறங்க முடியாமல் மலை மேல் தங்கினர். ஆனால், பக்தர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 

தீ கட்டுக்குள் வந்த நிலையில் பக்தர்கள் மலை அடிவாரத்திற்கு வந்து கொண்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஓரளவிற்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து  காரணமாக அனுமதிக்கப்பட்ட 4வது  நாளான இன்று சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.