WATCH

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் திரு ஆனி ஸ்வாதி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
 

Share this Video

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 108 திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்தலமாகும். இங்கு ஸ்ரீமன் நாராயணன் வடபத்ரசாயி என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளார். இத்தலம் 12 ஆழ்வார்களில், இரண்டு ஆழ்வார்கள் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார், மற்றும் அவர் திருமகளாய் தோன்றிய ஆண்டாளும் அவதரித்த பெருமையுடையது. இங்கு வருடம் தோறும் ஸ்ரீ ஆண்டாளின் ஆடிப்பூர உற்சவத்திற்கு முன்பு அவரது தந்தையான பெரியாழ்வார் ஆனி ஸ்வாதி உற்சவம் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும்.



இந்த ஆண்டுக்கான உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ரகு பட்டாச்சாரியார் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து கொடியினை ஏற்றி வைத்தார். முன்னதாக பெரியாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் 9ஆம் திருநாள் அன்று ஜூன் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

Related Video