ராஜபாளையம் அருகே மாட்டு வண்டி மீது மோதி தூக்கி வீசப்பட்ட கார்; வீடியோ வெளியாகி பரபரப்பு

தென்காசி - ராஜபாளையம் சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

First Published May 18, 2023, 1:23 PM IST | Last Updated May 18, 2023, 1:23 PM IST

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தென்காசி ராஜபாளையம் செல்லும் சாலையில் கார் ஒன்று ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பாலம் ஒன்றில் சென்று கொண்டிருக்கும்போது முன்னே சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியை கவனிக்காமல் திடீரென காரின் முன் பகுதி மாட்டு வண்டியில் வேகமாக மோதியது. 

இதில் மாட்டு வண்டி, கார் இரண்டும் தூக்கி  வீசப்படும் சிசிடிவி காட்சிகள் பின்னே வந்த காரின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கார் மற்றும் மாட்டு வண்டியில் இருந்த நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video Top Stories