வெள்ளத்தில் சிக்கி விடிய விடிய தவித்த பக்தர்கள்; உயிரை பணயம் வைத்து மீட்ட வனத்துறையினர்

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக்கோவிலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 20 பக்தர்களை வனத்துறை அதிகாரிகள் போராடி மீட்டனர்.

Share this Video

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் சென்றனர். மதியம் முதல் தொடர்ந்து விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோயில் அடிவாரத்துக்கு வருகை தந்த 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓடையை கடக்க முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் இன்று தீயணைப்புத் துறையினர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள், வனத்துறையினர் இணைந்து கயிறு கட்டி 22 பக்தர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலைப் பகுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Video