நான் ஓட்டு போட போறேன் நீயும் வரியா; தாயை ஜனநாயக கடமையாற்ற அழைக்கும் 2 வயது மழலையின் வீடியோ வைரல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனது தாயை 2 வயது குழந்தை தனது மழலை மொழியில் ஓட்டு போட அழைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அரசியல் கட்சியினர்களுக்கும், வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிந்த பின்பும், வாக்குகள் எண்ணப்படும் நாளான ஜூன் 4-ம் தேதி வரை தொடர்கிறது. 

அந்த தேர்தல் ஜுரம் 2 வயது குழந்தையை கூட விட்டு வைக்கவில்லை. சிவகாசியை சேர்ந்த ஷிவானிஸ்ரீ என்ற குழந்தை அப்பாவித்தனமான முகத்துடன் தன்னுடைய தாயை தனது மழலை மொழியில் நான் ஓட்டு போடப் போறேன்!- நீ வரியா? ஓட்டு போட போவோம்!! என அழைக்கிறது. இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Related Video