விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 2 பேர் பலி; குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலை பட்டம்புதூர் விலக்கு அருகே சாலையின் நடுவில் இருந்த பாலத்தில் கார் மோதிய விபத்தில் இருவர் பலி. ஒரு குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்.

Share this Video

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 63) என்பவது தனது குடும்பத்துடன் காரில் சேலத்திலிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது விருதுநகர் அருகே பட்டம்புதூரில் வந்து கொண்டிருந்தபோது கார் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் காரை பாலத்தில் இருந்து மீட்டனர். இதில் கார் ஓட்டுநர் பெருமாள் (60) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த கயாமடைந்த ராஜேந்திரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

ராஜேந்திரனின் மகன், மருமகள், 12 வயது சிறுமி ஆகிய மூன்று பேர் பலத்த காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சூலக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video