புதுமண தம்பதிக்கு 2.5 லட்சம் புல்லட் பைக்கை பரிசாக வழங்கி அழகு பார்த்த நண்பர்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதுமண தம்பதிக்கு 2.5 லட்சம் மதிப்பிலான புல்லட் வாகனத்தை பரிசாக வழங்கி மணமக்களை நெகிழ வைத்த நண்பர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velmurugan s  | Published: Jun 16, 2023, 7:25 AM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் குகன் - கவிதா தம்பதிக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.  வழக்கம்போல் வெகு விமரிசையாக திருமண விழா நடைபெற்ற நிலையில். திருமணத்தில் கலந்து கொண்ட மணமகனின் நண்பர்கள் மணமகனுக்கு 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான புல்லட் பைக்கை திருமண பரிசாக வழங்கி மணமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இதனை சற்றும் எதிர்பாராத மணமக்கள் நண்பர்கள் வழங்கிய பரிசு பைக்கை பார்த்து மகிழ்ச்சியில் திகைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read More...

Video Top Stories