Watch : கள்ளக்குறிச்சியில் நகர்புற நல வாழ்வு மையம் திறப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

கள்ளக்குறிச்சியில் தொடங்கப்பட்ட நகர்புற நல வாழ்வு மையத்தை சுகதார துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 

Share this Video

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 500 நகர்புற நல வாழ்வு மையத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி நகர்புறத்தில் நேற்று தொடங்கபட்ட நாகர்புற நல வாழ்வு மையத்தில் மக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

மருந்துகள் இருப்பு, மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அனுபவங்கள் உள்ளிட்டவைகளை குறித்து கேட்டறிந்தார். மேலும் அதிக மக்கள் வசிக்க கூடிய இடத்தில் மையத்தை அமைக்க இடம் தேர்வு செய்த மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். சிகிச்சைக்கு வந்த மக்களுக்கு நலவாழ்வு மையத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், துணை இயக்குனர் சுகாதார பணிகள் ராஜா உளிட்டோர் உடன் இருந்தனர்

Related Video