“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பொன்முடி

விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.

First Published Feb 16, 2024, 6:50 PM IST | Last Updated Feb 16, 2024, 6:50 PM IST

விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் திமுக  துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க,பொன்முடி தலைமையில் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

தனது தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டம் என்பதால் மேடையை பார்க்க வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று வாக்கு முகவர்களுக்கான கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் இளைஞர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அதனை தொடர்ந்து மாலை நடைபெறும் பொது கூட்டத்தில் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாக தெரிவித்தார்.

 

Video Top Stories