பொன்முடி மீதான தண்டனை நிறுத்தி வைப்பு; திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திருவெண்ணைநல்லூரில் திமுக கழக துணை பொதுச் செயலாளர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி வழக்கினை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததன் எதிரொலியாக திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

First Published Mar 11, 2024, 5:39 PM IST | Last Updated Mar 11, 2024, 5:39 PM IST

திமுக கழக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவியை குற்றவாளிகள் என அறிவித்து தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பொன்முடி தனது அமைச்சர் பதவி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரு தரப்பு வாதங்களை பெற்ற உச்சநீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி மீதான தண்டனையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் விதமாக திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் மார்க்கெட் பகுதியில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Video Top Stories