திண்டிவணத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கடும் மோதல்; பீதியில் பொதுமக்கள்

திண்டிவனத்தில் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் மக்கள் நடமாட்டம் உள்ள பரபரப்பான வீதியில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், கோனேரிக்குப்பகுதியில் இயங்கி வரக்கூடிய கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிப்பதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் பள்ளி முடித்துவிட்டு வந்த மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் திண்டிவனம் ராஜாஜி சாலையில் தடியை கையில் வைத்துக் கொண்டு வந்து ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர்.

இந்த மோதலில் கல்லூரி மாணவரின் மண்டை உடையவே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சக மாணவர்கள் சேர்த்துள்ளனர். பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video