Asianet News TamilAsianet News Tamil

Kallakurichi: கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வலியால் துடிதுடித்து உயிருக்கு போராடிய நபர்; வைரலாகும் வீடியோ

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு உயிருக்காக போராடிய நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52ஐ கடந்துள்ளது. 130க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 30 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவர் கள்ளச்சாராயத்தை குடித்த காரணத்தால் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு தமக்கு என்ன செய்கிறது என்பதை சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே கந்தன் தனது வீட்டில் துடிதுடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Video Top Stories