Asianet News TamilAsianet News Tamil

“சாமி கேப்டன் நல்லா இருக்கனும்” விஜயகாந்துக்காக கடவுளுடன் பாசப்போராட்டம் நடத்தும் 5 வயது மழலை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி 5 வயது குழந்தை இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் வீடியோ தேமுதிக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First Published Dec 1, 2023, 11:19 AM IST | Last Updated Dec 1, 2023, 11:19 AM IST

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியம் கொட்டாமேடு கிராமத்திற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு வருகை தந்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் தனது தீவிர தொண்டரான ராஜீவ்காந்தி & சத்யா இவர்களுக்கு தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்தார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை கேள்விபட்ட தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி ராஜீவ்காந்தி, சத்யா தம்பதியரின் 5 வயது  குழந்தை நிவேஷ் தனது தாய், தந்தைக்கு திருமணம் செய்து வைத்த கேப்டன் விஜயகாந்த் பூர்ண நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தேமுதிக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories