அண்ணன் பேசும்போது அமைதியா போகனும்னு தெரியாதா? பைக்கில் சென்ற நபரை தாக்கி அடாவடி செய்த அதிமுகவினர்

திருப்பத்தூரில் அதிமுகவினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேசி கொண்டிருந்தபோது மதுபோதையில் அதிக சத்தத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை அடித்து துவம்சம் செய்த அதிமுகவினர்.

Share this Video

ஆஇஅதிமுக 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் காமராஜ் நகர் பகுதியில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பேசி முடிந்த பின்பு முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளருமான கே.சி வீரமணி பேசிக்கொண்டிருந்தார். அப்போது சிகேசி ஆசிரமம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 34) என்பவர் இருசக்கர வாகனத்தில் அதிக சத்தத்துடன் மதுபோதையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற வழியாக சென்றுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின்னர் மீண்டும் மீண்டும் அதே வழியாக அதிமுகவினரை வெறுப்பேற்றும் வகையில் வந்ததால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். பின்னர் திடீரென தாக்குதலிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பத்தூர் நகர போலீசார் அந்த வாலிபரை பிடித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Video