Asianet News TamilAsianet News Tamil

Watch : மிகப் பெரிய உருவாக்கப்பட்ட மூவர்ணக்கொடி! - திருச்சியில் உலக சாதனை நிகழ்வு!

திருச்சியில் தனியார் பள்ளியின் சார்பில் ஆரிகாமி டைல்ஸ்களை அடுக்கி வைத்து மிகப் பெரிய அளவில் தேசியக் கொடி உருவாக்கப்பட்டது. இது உலக சாதனை நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 

First Published Apr 3, 2023, 3:08 PM IST | Last Updated Apr 3, 2023, 3:09 PM IST

75ஆவது சுதந்திர ஆண்டினைக் கொண்டாடும் வகையில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள்தலைமையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டினை முன்னிட்டும், பள்ளி துவங்கி 28ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையிலும் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மிக பிரம்மாண்டமாக, தமிழகத்திலேயே இது வரை யாருமே செய்திடாத வகையில் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்படது.

1,60,000த்திற்கும் அதிகமான ஆரிகாமி காகித இதயங்களை செய்து, ஒட்டிவைத்து 337.50 சதுரஅடி அளவிற்கு இந்திய தேசியக் கொடியை மிக பிரம்மாண்டமான அளவில் வடிவமைத்தனர்

Video Top Stories