Watch : இரு கார் நேருக்குநேர் மோதி பயங்கர விபத்து! 3 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

திருச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில், மூன்று பேர் பலியாகினர், 5 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
 

Share this Video

சேலத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற காரும், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக வந்த காரும் மாத்தூர் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் மகிஷாஸ்ரீ(வயது12), சுமதி(வயது 45) டிரைவர் கதிர் (வயது 47)சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார் படுகாயம் அடைந்த 5க்கும் மேற்பட்டோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் 3பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர சாலை விபத்தால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

Related Video