Asianet News TamilAsianet News Tamil

திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதனையடுத்து ஏற்கனவே உள்ள முனையம்  மூடப்பட்டது. 

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1112 கோடியில் புதிய டெர்மினல் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான திட்டத்தை 2019ம் ஆண்டு  வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  3 ஆண்டுகளுக்குள் புதிய டெர்மினல் கட்டி முடிக்கப்பட்டு, பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதியன்று திறந்து வைத்தார்.

ஒரே நேரத்தில் 3500க்கும் மேற்பட்ட பயணிகள் கையாளலாம்.  750 கார்கள், 250 டாக்சிகள், 10 பஸ்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. புறப்பாடுக்காக 10 கேட்கள், வருகைக்காக 6 கேட்கள், 60 செக்-இன் கவுன்டர்கள், இமிகி ரேஷன் பிரிவுக்காக தலா 40 கவுண்டர்கள், 15 எக்ஸ்ரேமெஷின்கள், 3 விஐபி லவுஞ்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணி களின் உடமைகளை எடுத்து வர சாய்வுதள கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட உள்ளது. அதிநவீன வசதிகளுடன்கூடிய கண்காணிப்புகோபுரம் மூலம் ரன் வேயின் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செயல்பட துவங்கிய புதிய முனையத்தில் வருடத்திற்கு 4.5 மில்லியன்(45 லட்சம்) பயணிகளை கையாள முடியும. ஒரே சமயத்தில் 10 விமானங்களில்  உள்ள பயணிகளை கையாளலாம்.  புதிய முனையத்தில்  ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள்  தரையிறங்கும் வசதி உள்ளது. 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 240 விமானங்கள் தரையிறங்கி புறப்படலாம். ஒட்டுமொத்தமாக 75 ஆயிரம் சதுர மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ளது திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம்.

சென்னையில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானம் முதலாவதாக புதிய முனையத்திற்கு வந்தது. அந்த விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து (வாட்டர் சல்யூட்) வரவேற்பு கொடுக்கப்பட்டது. இன்று வருகை தரும் புறப்படும் பயணிகளுக்கு இனிப்புகளை விமான நிலைய அதிகாரிகள் கொடுத்து புதிய முனைய செயல்படும்  நிகழ்வை கொண்டாடினர்.

Video Top Stories