Video : நாடு முழுவதும் ரயில்கள் ஓடாது! மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என SRMU எச்சரிக்கை!

இந்தியாவில் எந்த ரயிலும் ஓடாத அளவில் மிக பெரிய போராட்டம் நடைபெறும் என SRMU துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

Share this Video

ரயில்வே தனியார் மயத்தை கண்டித்து இந்திய ரயில்வே பாதுகாப்பை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பொன்மலையில் SRMU துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் பணிமனை முன்பு நடைபெற்றது.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வீரசேகரன், ரயில்வே தனியார்மயமாக்கும் முடிவை உடனே நிறுத்த வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை மாற்றி 2004க்கு முந்தைய திட்டத்தை வழங்கிட வேண்டும்.

ரயில்வே நிலையங்களை விரைவு ரயில்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. லட்சக்கணக்கான காலிடங்களை நிரப்பாமல் பயணிகள் பாதுகாப்பை அலட்சியப் படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.

மேலும் SRMU பொதுச் செயலாளர் கண்ணையா வழிகாட்டுதலின் படி இந்தியாவில் எந்த ரயிலும் ஓடாத அளவில் அகில இந்திய அளவில் நாடு தழுவிய பெரிய போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 100 -க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Video