உங்களுக்கு மட்டும் தான் கருமாதி நடத்த தெரியுமா? கன்னடர்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய தமிழர்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரும காரியம் நடத்திய கன்னடர்களுக்கு எதிராக அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் புகைப்படத்தை வைத்து தமிழக விவசாயிகள் திருச்சியில் கரும காரியம் நடத்தினர்.

First Published Sep 26, 2023, 3:16 PM IST | Last Updated Sep 26, 2023, 3:16 PM IST

காவிரியில் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்துமாறு கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்தின் ஒருபகுதியாக கர்நாடகாவில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர் வினையாக திருச்சியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து கரும காரியம் நடத்தினர்.

Video Top Stories