Video : சினிமாவில் ஓடும் ''பொன்னியின் செல்வன்'' கல்கியினுடையது அல்ல! - நடிகர் பார்த்திபன் கருத்து!

பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்தின்தினுடைய பொன்னின் செல்வனாக தான் உள்ளது. கல்கியினுடைய பொன்னியின் செல்வனாக இருக்க வாய்ப்பில்லை - திருச்சியில் நடிகர் பார்த்திபன் பேச்சு.
 

First Published Oct 13, 2022, 2:40 PM IST | Last Updated Oct 13, 2022, 2:40 PM IST

திருச்சியில் மூர்த்திஸ் திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திறந்தவெளி திரையரங்கை திரைப்பட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன், தமிழ் திரைப்படம் என்றாலே பொன்னியின் செல்வன் தமிழ் திரையரங்கில் பாராட்டப்படக்கூடிய திரைப்படமாக உள்ளது.

பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்கும் பொழுது நானும் ஒரு நாள் திரைப்படத்தின் நடிப்பேன் என்ற நினைப்பு இல்லாமல் இருந்தேன். தற்பொழுது வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்தின்தினுடைய பொன்னின் செல்வனாக தான் உள்ளது. கல்கியினுடைய பொன்னியின் செல்வனாக இருக்க வாய்ப்பில்லை என்றார். இயக்குனர் எதை சொல்லிக் கொடுக்கிறாரோ அதைத்தான் நான் செய்திருக்கிறேன். நிறைய காதல் இருப்பதினால் தான் நான் இன்னும் இளமையாக இருக்கிறேன் என நகைச்சுவையாகும் பேசிமுடித்தார்.