Asianet News TamilAsianet News Tamil

மணப்பாறை அருகே பொங்கல் பண்டிகை- ஜல்லிக்கட்டில் பங்கேற்ற 300 காளைகள்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் N.பூலாம்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கல் விழாவினை முன்னிட்டு தேவாலய திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் N.பூலாம்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கல் விழாவினை முன்னிட்டு தேவாலய திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 600-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் கண்டனர். 

போட்டியினை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். பங்குதந்தை அ.ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் சிறப்பு பிராத்தனைக்கு பின் வாடிவாசல் வழியே கோயில் மற்றும் உள்ளூர் காளைகள அவிழ்க்கப்பட்டதையடுத்து, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பட்டிருந்த காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கபட்டு வருகிறது. வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த காளைகளை காளையர்கள் திமிலை  தழுவி வருகின்றனர். 

இதில் காளையினை  பிடித்து தழுவி வெற்றிக்கண்ட வீரர்களுக்கும், காளையர்கள் கைகளில் சிக்காமல் சீறிபாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கம், சில்வர் பாத்திரங்கள், வெள்ளிக்காசு, கட்டில், எல்.இ.டி டிவி, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. போட்டியினை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Video Top Stories