ஸ்ரீரங்கத்தில் பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பை கொண்டாடும் பாஜகவினர்

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு கூடியிருந்த மக்கள் வரவேற்பு அளித்த விதத்தை பாஜகவினர் கொண்டாடுகின்றனர்.

Share this Video

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் அருகே பிரத்யேக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டு அங்கு ஹெலிகாப்டரில் வந்திரங்கினார் பிரதமர்.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பயணித்த பிரதமரை சாலையின் இரு புறங்களிலும் கூடியிருந்த தொண்டர்கள், பொதுமக்கள், ரங்கநாதர் கோவில் பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு வரும் முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பதால் அது அப்பகுதி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரதமருக்கு அப்பகுதி மக்கள் அளித்த வரவேற்பை தற்போது பாஜகவினர் சமூக வலைதளங்களில் வீடியோவாக பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Related Video