திருச்சியில் இராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடத்தில் அமர்ந்து கம்பராமாயண பாடல்களை நெகிழ்ச்சியுடன் கேட்ட மோடி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள மண்டபத்தில் இராமாயணத்தை கம்பர் இயற்றிய நிலையில் அதே இடத்தில் அமைர்ந்து பிரதமர் மோடி இன்று கம்பராமாயண பாடல்களை கேட்டு நெகிழ்ச்சி அடைந்தார். 

Share this Video

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் உள்ள மண்டபத்தில் தான் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் கவி சக்கரவர்த்தி கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார். இன்றைய தினம், அந்த வரலாற்று சிறப்புமிக்க மண்டபத்தில் நமது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி கம்பராமாயண பாடல்களை பாட கேட்டு நெகிழ்ச்சி அடைந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ் இலக்கியத்தையும், ஆன்மீகத்தையும் தனது உயிராக கொண்டு பணி செய்துவரும் மரியாதைக்குரிய கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் அவர்கள், தமிழ் இலக்கிய நூல்களை இயற்றுவதில் பன்முகத்தன்மை கொண்ட பேராசிரியர் திரு ஞானசுந்தரம் அவர்கள், மற்றும் குழந்தை மருத்துவத்தில் நிபுணரும் கம்பராமாயணத்தின் மீது மாறா பற்று கொண்டவருமான டாக்டர் பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கர்நாடக இசையில் தனித்துவத்துடன் திகழும் திரு சிக்கில் குருச்சரண் அவர்கள் கம்பராமாயணத்தை அழகு தமிழில் கவி பாடினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Video