Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு; கர்ப்பிணிகளை அட்சதை தூவி வாழ்த்திய அமைச்சர்

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 100 கர்ப்பிணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

First Published May 24, 2023, 5:36 PM IST | Last Updated May 24, 2023, 5:36 PM IST

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாய், சேய் நலனை மேம்படுத்தும் வகையில்  சமுதாய வளைகாப்பு நிகழ்வு நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமப்பூ,  கண்ணாடி வளையல், பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்பேடு அடங்கிய பொருட்களை வழங்கி அட்சதை தூவி வாழ்த்தினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா மண்டல குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Video Top Stories