Asianet News TamilAsianet News Tamil

Watch : முசிறி அருகே மக்கள் நலம் வேண்டி நடைபெற்ற மகா சண்டி யாகம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் மகா சண்டி யாகம் விமர்சையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்றனர்.
 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. காட்டுப்புத்தூர் பகுதி மக்கள் நன்மைக்காகவும் கல்வி, செல்வம், வீரத்தில், சிறந்து விளங்கவும் ஆரோக்கியத்திற்கும் மற்றும் இப்பகுதியில் விவசாயம் செழிக்க மக்கள் செழுமையுடன் வாழ வேண்டி மகா சண்டியாகம் நடந்தது

யாகசாலையில் 83இடங்களில் வர்ண பூஜை, கோ பூஜை, பழி பூஜை சண்டிகா ஆராதனைகள், 700ஸ்லோகங்கள் சொல்லி யாகம் தொடங்கியது. மேலும், 64- பைரவர்கள் ஸ்ரீ சண்டிகா ஹோமம் மகா பூர்ணாகுதி 16விதமான திரவியங்களால் அபிஷேகம், 13வகையான தேவதைகளுக்கு பூஜை போன்றவைகளால் மகா சண்டி யாகம் நடைபெற்றது.

யாககுண்டத்தில் பலவிதமான பழங்கள் மற்றும் திரவியங்கள் பல வண்ண பூக்கள் கொண்டு யாகங்களை சிவாச்சாரியார்கள் செய்தனர். பின்பு யாகத்தின் முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த யாகத்திலும் பூஜைகளிலும் பொதுமக்கள் பெண்கள் பக்த கோடிகள் திரளாக கலந்து கொண்டு இறைவன் அருள் பெற்றனர்.
 

Video Top Stories