திருச்சியில் அமைச்சர் ஏ.வ.வேலு தொடர்புடைய பைனான்சியர் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை

திருச்சியில் அமைச்சர் ஏ.வ.வேலுக்கு தொடர்புடைய பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Share this Video

திருச்சி தென்னூர் அண்ணாநகரில், கண்ணதாசன் சாலையில் உள்ள திமுக அமைச்சர் எ.வ.வேலுவிற்கு தொடர்புடைய மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டில் தற்போது இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது விசாரணைக்காக குடும்பத்தினரை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். மணப்பாறை சாமிநாதன் என்பவர் பிரபல பைனான்சியர் ஆவார். மேலும் லட்சுமி காபித்தூள் ஏஜென்சியும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.வ.வேலு வீட்டில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியில் அவருக்கு தொடர்புடைய ஒரு வீட்டில் நடைபெறுகிற இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Video