Watch : திருச்சியில் சுழன்று சுழன்று வீசிய சூறைக்காற்று! வேரோடு சாய்ந்த மரங்கள்! மின்கம்பங்கள்!
திருச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதியில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பல இடங்களில் மரங்கள் - மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தது
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில், மாலை கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. மனச்சநல்லூர், நொச்சியும், முசிறி, லால்குடி போன்ற இடங்களில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.
நொச்சியம் அருகே உள்ள கூடப்பள்ளி, கிளிய நல்லூர், குமரக்குடி போன்ற ஊர்களில் சுழன்று வீசிய சூறைக்காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. குமரக்குடி அருகே 100 ஆண்டுகளுக்கும் மேலான மருதமரம் வேரோடு சாய்ந்தது.
இதே போல் லால்குடி, வாத்தலை, முசிறி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் கணக்கில் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. ஏராளமான பயிர் வகைகளும் மழைநீரில் மூழ்கி சேதமாகின.