சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
திருச்சி நகர் பகுதியில் நேற்று காலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், லால்குடி, ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட கோயில்களையும் மழைநீர் சூழ்ந்தது.
உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கிழக்கு ரத வீதி மற்றும் ராஜகோபுரம் முன்பு மழை நீர் சூழ்ந்ததால் பக்தர்கள் கடும் சிரமத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருச்சி நகர் பகுதியில் நேற்று காலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், லால்குடி, ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட கோயில்களையும் மழைநீர் சூழ்ந்தது.
அதேபோல் உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கிழக்கு ரத வீதி மற்றும் ராஜகோபுரம் முன்பு மழை நீர் சூழ்ந்தது. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலும் கடும் சிரமத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சமயபுரம் கோவில் முன்பு கிழக்கு ரத வீதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், ராஜகோபுரம் முன்பு தேங்கி நிற்கும் மழை நீர் குளம் போல் காட்சி அளிக்கிறது.