திருச்சி: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.. விவசாயிகள் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம்

விவசாய விலை பொருட்கள் இரண்டு மடங்கு லாபம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி  விவசாயிகள் திருச்சியில் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

First Published Jul 28, 2023, 3:02 PM IST | Last Updated Jul 28, 2023, 3:02 PM IST

திருச்சி, சிந்தாமணி பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் ஆனது “மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

ஒரு கிலோ நெல்லுக்கு 54ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாய் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாது அணையை கட்டக்கூடாது கோதாவரி காவேரி இணைப்பிற்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் விவசாயிகள் அரை நிர்வாண தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!

Video Top Stories