அசுர வேகத்தில் மோதி பெண்ணை அந்தரத்தில் பறக்கவிட்ட கார்; தூய்மை பணியாளர் பலி

திருச்சி அருகே அசுர வேகத்தில் வந்த கார் மோதிய விபத்தில் சாலை ஓரம் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் தூக்கி வீசப்பட்ட வீடியோ வெளியாகிபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மனைவி ரூபி(38). இவர் பஞ்சப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் பணிகளை முடித்த ரூபி கல்லூரி வளாகத்தில் இருந்து வீடு திரும்பிய போது, வளாகத்திற்குள் அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ரூபியின் மீது மோதி தூக்கி வீசி விட்டு சிறிது தூரம் ஓடி நின்றது.

தூக்கி வீசப்பட்ட ரூபி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அனால் சிகிச்சை பலனின்றி ரூபி உயிரழந்தார்.

ரூபி விபத்தில் சிக்சி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் சீனிவாசனை(42) மணிகண்டம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Video