Watch : விமான பயணியிடம் தோட்டா பறிமுதல்! - அதிரடி சோதனையில் சிக்கிய அப்பாவி இளைஞர்!

விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணியின் உடமையில் துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
 

Share this Video

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் நோக்கி செல்லும் இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட தயார் நிலையில் இருந்தது. அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சந்தோஷ் ராஜம், என்பவரை சோதனை செய்ததோடு அவரின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.

அப்போது அவரது உடமையில் வெடிக்காத 5.56மிமீ அளவுள்ள துப்பாக்கி தோட்டா இருப்பதை பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்து அதனை பறிமுதல்
செய்தனர்.

அதோடு அந்த இளைஞர் சந்தோஷ்ராஜத்தை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதை எடுத்து அவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த துப்பாக்கி தோட்டா எங்கிருந்து தனது உடமைக்கு வந்தது என்று தெரியவில்லை என்று சந்தோஷ் கூறியுள்ளார். மேலும் அவரிடம் இருந்து முழு தகவல்களையும் பெற்றுக்கொண்டு போலீசார் அவரை ஜாமினில் விடுதலை செய்தனர்.

Related Video