நான் தோசை சுட வரவில்லை என கூறிய அண்ணாமலை திருச்சியில் அண்ணாமலை புரோட்டா சுடும் காட்சி

தமிழகத்திற்கு நான் தோசை சுட வரவில்லை என்று கூறியிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்சியில் உணவகம் ஒன்றில் புரோட்டா சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக என் மண், என் மக்கள் பாதயாத்திரையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு திருச்சி மாவட்டம் துவாக்குடியில் நடைபெற்ற கூட்டத்திற்காக சென்ற அவர் அங்குள்ள புரோட்டா கடை ஒன்றில் திடீரென உள்ளே நுழைந்து புரோட்டார் சுட ஆரம்பித்தார். இதைக் கண்டு அங்கு இருந்த கட்சியினர் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் மத்தியில் ஆவேசமாக பேசிய அண்ணாமலை, நான் தமிழகத்திற்கு தோசை சுட வரவில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் தற்பொழுது திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் முறுக்கு சுட்டும், துவாக்குடிகள் புரோட்டா சுட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

Related Video