பேசுவதற்காக மைக்கை பிடித்த ஸ்டாலின்; மோடி மோடி என முழங்கிய பாஜகவினர் - அமைதி காத்த முதல்வர்

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசத் தொடங்கும் போது கூட்டத்தில் இருந்த பாஜகவினர் மோடி மோடி என கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Share this Video

திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். மேலும் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றிருந்தார்.

அப்போது நிகழ்ச்சி மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசத் தொடங்கும் சமயத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பாஜகவினர் மோடி மோடி என தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கோஷம் எழுப்பியவர்களை பார்த்து தனது கைகளை அசைத்து அவர்களை ஆசுவாசப்படுத்தினார்.

Related Video