Watch :ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்ட நயன்-விக்னேஷ் சிவன் தம்பதி! திருச்சி ரயில் நிலையத்தில் குவிந்த கூட்டம்

கும்பகோணத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி திருச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். அங்கிருந்து கும்பகோணம் சென்ற இருவரும் பிராத்தனை முடித்துக்கொண்டு திருச்சி திரும்பினர்.
 

First Published Apr 5, 2023, 7:14 PM IST | Last Updated Apr 5, 2023, 7:39 PM IST

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அக்டோபர் மாதம் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கும்பகோணத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி திருச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். அங்கிருந்து கார் மூலம் கும்பகோணம் சென்றனர். அங்கு வழுத்தூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். இருவரும் பிராத்தனை முடித்துக்கொண்டு மீண்டும் திருச்சி திரும்பினர்.



சென்னை செல்வதற்காக திருச்சி ரயில் நிலையம் வந்த நயன்தாரா விக்னேஷ் சிவனை கண்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர் இதனால் திருச்சி ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் சில ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பிளாட்பாரம் டிக்கெட் எடுக்காமல் வந்திருந்தனர் அவர்களே பரிசோதகர்கள் எச்சரித்து அனுப்பினர்

இந்த பயணத்தில், நயன்-விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தைகளை தங்களுடன் அழைத்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories