திடீரென ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட மூதாட்டி; சாதுர்யமாக மூதாட்டியை காப்பாற்றிய பெண் கேட் கீப்பர்

திருச்சியில் ரயிலை கடக்க முயன்று ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட மூதாட்டியை பெண் கேட் கீப்பர் சாதுர்யமாக செயல்பட்டு மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

திருச்சி மாவட்டம், மணப்பாறை ரயில்வே கேட்டில் ரயில் நிற்கும் போது பொதுமக்கள் கடந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று ரயில்வே கேட்டில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது வழக்கம் போல பொதுமக்கள் கேட்டை கடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர் ரயிலின் அடியில் நுழைந்து எதிர் திசைக்கு செல்ல முயன்றார்.

திடீரென சரக்கு ரயில் புறப்பட்டதும் அவர் நிலை தடுமாறி தண்டவாளத்தின் நடுவே விழுந்தார். இதனைக் கண்ட கேட் கீப்பர் ஈஸ்வரி உடனடியாக அந்த மூதாட்டியை அப்படியே படுக்கச் சொன்னார். உடனடியாக சதுர்த்தியமாக ரயிலை நிறுத்தி அதன் பின்னர் மூதாட்டி எந்தவித காயம் இன்றி தண்டவாளத்தின் அடியிலிருந்து வெளியே வரவழைத்தனர்.

பின்னர் சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது. மூதாட்டி விழுந்ததும் உடனடியாக வேகமாக செயல்பட்டு சதுர்த்தியமாக ரயிலை நிறுத்தி மூதாட்டியை காப்பாற்றிய ரயில்வே கேட் பணியாளர் ஈஸ்வரியை பொதுமக்கள் மனதார பாராட்டினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Video