Viral Video : திருச்சியில் ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பெண்! - தக்க சமயத்தில் காப்பாற்றிய காவலர்!
திருச்சி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பெண்! - தக்க சமயத்தில் காப்பாற்றிய ஆர்.பி.எப் காவலர்!
திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் சென்னையிலிருந்து குருவாயூர் செல்லக்கூடிய ரயில் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. மீண்டும் ரயில் பிளாட்பாரம் 4-லிருந்து புறப்பட்ட பொழுது கடைசி நேரத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தோளில் பை ஒற்றை மாட்டிக்கொண்டு ஓடும் ரயிலில் ஏற முற்பட்டார்.
படியில் ஏறிய உடன் அவர் பின்பக்கமாக சாய்ந்து விழுந்து ரயிலுக்கும் தண்டாவாளத்திற்க்கும் உள்ள இடைவெளியில் சிக்க இருந்தார். அதைப் பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சதீஷ்குமார் அவரைக் காப்பாற்றி இழுத்து பிளாட்பாரத்தில் விட்டார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.
அங்கிருந்த பயணிகள் அனைவரும் அக்காவலரை பாராட்டினர். கடைசி நேரத்தில் வந்துவிட்டு, ஓடும் ரயில் ஏன் ஏறுகிறீர்கள் என அறிவுரை கூறி அமர வைத்தனர். இக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.