Asianet News TamilAsianet News Tamil

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளை அலறவிட்ட பயணி; அரிய வகை பாம்புகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 47 வகையான அரிய வகை பாம்புகள், பல்லிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேசியாவில் இருந்து இன்று திருச்சி விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் அவர்களுடைய  உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை  மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நடந்து கொண்ட ஆண் பயணியின் உடமையை சோதனை செய்த போது அதில் 47அரியவகை பாம்புகள் மற்றும் 2 பல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவற்றைப் பறிமுதல்  செய்த செய்த அதிகாரிகள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். திருச்சி மாவட்ட வன  அதிகாரிகள் பாம்புகள் மற்றும் பல்லிகளை எடுத்துச் சென்றனர். இதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பாம்பு மற்றும் பல்லிகளை கடத்தி வந்த நபர் சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன்(வயது 30) என தெரிய வந்தது.

தொடர்ந்து அதிகாரிகள் முகமதுமொய்தீன் யாருக்காக அவற்றை கடத்தி வந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வந்த நிலையில் தற்பொழுது அரிய வகை பாம்பு கடத்திவரப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories