VIDEO : ஆசன வாயில் மறைத்து வைத்து கடத்தி வந்த 161 கிராம் தங்கம் பறிமுதல்! துபாய் பயணியிடம் விசாரணை!

Gold smuggling | துபாயிலிருந்து திருச்சி வந்த பயணி, ஆசன வாயில் மறைத்து வைத்து கடத்தி வந்த 161 கிராம் தங்க கட்டியை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Share this Video

துபாயில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட ஆண் பயணி ஒருவரை தனியாக சோதனை மேற்கொண்டனர்.

அவர் ஆசனவாயில் மறைத்து வைத்து ரூ. 9லட்சத்து 75ஆயிரத்து 499மதிப்புள்ள 161 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்து அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Video