தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிராத்தனை மேற்கொண்டார்.

Share this Video

 தூத்துக்குடி-யில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பின்னர் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள உலக புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றான பனிமய மாதா பேராலயத்திற்கு சென்றார். அங்கு அவரை பங்குதந்தை குமாரராஜா வரவேற்றார். பின்னர் மெழுகுவர்த்தியை காணிக்கையாக வழங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிராத்தனை மேற்கொண்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிகழ்ச்சியின்போது தமிழக பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சித்தாரங்கன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Video