Watch : கர்ப்பிணிப் பெண் தனியாக இருந்த வீட்டில் வாகனங்களுக்கு தீவைத்த மர்ம நபர்கள்! தீக்கிரையான கார்

கர்ப்பிணி பெண் தனியாக இருந்த வீட்டில் உள்ள வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு கார் 3 இரு சக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
 

Share this Video

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள புதுக்குடி வள்ளுவன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் இவரது வீட்டில் இவரது மனைவி கீர்த்திகா தனியாக வசித்து வருகிறார். கீர்த்திகா தற்போது ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செந்தமிழ்ச்செல்வன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரை அவர் வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி உள்ள செந்தில் என்பவர் குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா செல்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார்.இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கீர்த்திகா வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட மூன்று இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

இதில் கார் உள்ளிட்ட மூன்று இரு சக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளது. இதனையடுத்து கீர்த்திகா அளித்த புகாரின் அடிப்படையில் குடவாசல் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து தடவியல் துறையினர் உதவியுடன் ஆய்வு செய்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video