Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் டிஆர்பி ராஜா

ஆய்வுக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பேசும்போது கண்ணீர் விட்டு அழுத தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா.

First Published May 17, 2023, 9:39 AM IST | Last Updated May 17, 2023, 9:39 AM IST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னாள் முதல்வர் கருணாநிதியை பற்றி பேசிய பொழுது உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கியபடி கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார்.