100 நாள் வேலை அட்டை பதிவு செய்ய 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய பொறுப்பாளர் - வைரல் வீடியோ
100 நாள் வேலை அட்டை பதிவு செய்வதற்கு ஐந்து ரூபாய் லஞ்சம் வாங்கிய பணித்தள பொறுப்பாளர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட விடயபுரம் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக கடந்த பதினைந்து வருடங்களாக சேரன்மாதேவி என்பவர் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு மக்கள் நல பணியாளராக முத்துராஜா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட குறைதீர்க்கும் அலுவலர் கதிரேசன் என்பவர் இந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வில் பணித்தள பொறுப்பாளர் சேரன்மாதேவி வேலைக்கு வராத 30 நபர்களின் அட்டையை வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது. அந்த அலுவலர் மக்கள் நலப் பணியாளரே இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. விடயபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பணித்தள பொறுப்பாளர் சேரன்மாதேவி 100 நாள் வேலை அட்டையை பதிவு செய்வதற்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதாக அவரிடம் வாக்குவாதம் செய்து காணொளியாக அதனை பதிவு செய்துள்ளார்.
அந்த காணொளியில் ஏற்கனவே உங்கள் மீது குற்றச்சாட்டு இருக்கும்போது நீங்கள் எதற்காக 100 நாள் வேலை அட்டை பதிவு செய்கிறீர்கள் என்று அந்த இளைஞர் கேட்பதற்கு என்னை மக்கள் பணியாளர் தான் எழுத சொன்னார் என்றும், அவ்வளவு பணம் எல்லாம் நாங்கள் வாங்குவதில்லை என்பது போல அந்த வீடியோவில் அவர் கூறுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும்.. விஜய்க்கு தடை போடும் திமுக.! அண்ணாமலை சொன்ன பகீர் தகவல்