திருவண்ணாமலை ''மகாதீபம்'' - தீயாய் பரவும் வைரல் வீடியோ!
கார்த்திகை தீபத்திருநாள் முடிந்த பின்னரும், திருவண்ணமலை மகாதீப வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி கடந்த 6ம் தேதி திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் மழையிலும் அணையாமல் எரிவதாக பரவிய வதந்தியால் மகா தீபம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதுதொடர்பாக நமது செய்தியாளர், திருவண்ணாமலை கோவில் பணியாளர்களிடம் பேசிய போது, மழையினால் அணையவில்லை என்று கூறமுடியாது தெரிவித்த அவர்கள், தினமும் மாலைவேளையில் மகா தீபத்தை சுத்தம் செய்து நெய் ஊற்றி 6 மணி அளவில் ஏற்றப்படும் என்றும் தெரிவித்தனர். அந்த தீபம் காலை 5 மணியளவில் அதுவாகவே சில நேரங்களில் அணைந்துவிடும். மேலும், மாலை 6 மணி அளவில் மீண்டும் தீபம் ஏற்றப்படும் என தெரிவித்தனர்.