Asianet News TamilAsianet News Tamil

திருவண்ணாமலை ATM கொள்ளை வழக்கு..! குற்றிவாளியை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்!

ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு நியூஜ் மாவட்டத்தில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி ஹிரிப் (35) என்பவரை சுற்றி வளைத்து கைது செய்து, விமானம் வழியாக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களில் காஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.73 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தடையங்கள் எதுவும் சிக்கிவிடக்கூடாது என்பதால் ஏடிஎம்களை தீ வைத்து எரித்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளை கும்பல் சித்தூர் வழியாக ஆந்திர மாநிலம் சென்று கர்நாடக மாநிலத்தில் கோலார் கேஜிஎப் பகுதியில் தங்கி மறுநாள் தான் வெளிமாநிலத்ததிற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து தப்பி செல்ல உதவிய நபரை போலீசார் நேற்று இரவு கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், அரியானா மாநிலத்திற்கு சென்ற தனிப்படையினர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு நியூஜ் மாவட்டத்தில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி ஹிரிப் (35) என்பவரை சுற்றி வளைத்து கைது செய்து, விமானம் வழியாக சென்னைக்கு அழைத்து வந்தனர்.
 

Video Top Stories