மண்வெட்டியை கையில் பிடித்து கிரிவலப்பாதையை சுத்தம் செய்த அமைச்சர் ஏ.வ.வேலு
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதை முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இதில் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டார்.
திருவண்ணாமலை நகராட்சி துறை, உள்ளாட்சித் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் அறநிலையத்துறை, வருவாய் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் இணைந்து திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப்பாதை சந்திப்பில் தொடங்கிய தூய்மை செய்யும் பணிகள் கிரிவலப்பாதை முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பைப் மூலம் கிரிவலப் பாதையில் உள்ள நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
மேலும் அங்குள்ள குப்பைகளை தானே நேரடியாக களத்தில் இறங்கி தூய்மை பணியாளர்களுடன் கிரிவலப் பாதையை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து பணியாளர்களுடன் அமைந்து பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்டோர் காலை உணவு அருந்தினர்.