ஆரணி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான சிற்றுண்டியில் பல்லி; 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஆரணியில் அரசு ஆரம்பப்பள்ளியில் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டியில் பல்லி கிடந்த நிலையில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் மருத்தவமனையில் அனுமதி.

First Published Jan 29, 2024, 2:15 PM IST | Last Updated Jan 29, 2024, 2:15 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சேத்துப்பட்டு காட்டேரி  சமத்துவபுரம் பகுதியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இன்று காலை சிற்றுண்டியாக மாணவ, மாணவிகளுக்கு சேமியா கொடுக்கப்பட்டது. மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது  சேமியா இருந்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்ட. 13 மாணவ, மாணவிகளை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மாணவர்களை மருத்துவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனைவரும் நலமாக இருப்பதை உறுதி செய்தனர். அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை சிற்றுண்டியை சாப்பிட்ட மாணவர்களின் சாப்பாட்டில் பல்லி இருந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.