கோயிலில் இருந்து கொண்டு! அர்ச்சகர்கள் பேசுற பேச்சா இது! ஆபாச பேச்சால் முகம் சுளித்த பக்தர்கள்! வைரல் வீடியோ!

கோயில் அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களிடம் மேடையை சரியாக அமைக்காததால் நாங்கள் மிகவும் அச்சத்துடன் கொடி ஏற்ற வேண்டிய நிலைமை உள்ளது என கேட்டதற்கு கோயில் ஊழியர்கள் நாங்கள் இரவும் பகலும் எவ்வளவு வேலை பார்க்கிறோம் இது ஒரு குறையாக கூறுகிறீர்களே என்று அருவருக்கத்தக்க தகாத வார்த்தையில் பேசினார். 

vinoth kumar  | Updated: Apr 16, 2024, 12:19 PM IST

ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் தெய்வம் மந்திரங்கள் ஓதும் கோயில் குருக்கள் ஆபாச வார்த்தைகளை பேசிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று காலை சித்திரை பிரம்மோற்சவ விழா காலை 5 மணி அளவில் கொடியேற்றத்துடன் 10 நாள் உற்சவம் துவங்கியது.  காலை கொடியேற்று வதற்காக கொடிமரத்தின் மீது சுற்றி பெரிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடை மேல் ஏறி நின்று பூஜைகள் செய்யும்போது மேடை அசைவு ஏற்பட்டதால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனால் கோயில் அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களிடம் மேடையை சரியாக அமைக்காததால் நாங்கள் மிகவும் அச்சத்துடன் கொடி ஏற்ற வேண்டிய நிலைமை உள்ளது என கேட்டதற்கு கோயில் ஊழியர்கள் நாங்கள் இரவும் பகலும் எவ்வளவு வேலை பார்க்கிறோம் இது ஒரு குறையாக கூறுகிறீர்களே என்று அருவருக்கத்தக்க தகாத வார்த்தையில் பேசியதால் அப்பகுதியில் அர்ச்சகர்களுக்கும் அலுவலக ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் புனித இடத்தில் இருக்கும் போது இது போன்ற தவறான வார்த்தைகளை உபயோகித்து பேசுகிறார்கள் என முகம் சுளித்தது போல் சென்றனர் இதனால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டன.

Read More...

Video Top Stories