திருத்தணி மலை அடிவாரத்தில் அண்ணாமலைக்கு அமோக வரவேற்பளித்த பாஜகவினர்

திருத்தணி முருகன் கோயிலில் மலை அடிவாரத்தில்  என் மண் என் மக்கள் நிகழ்வை 190 வது திருத்தணி தொகுதியாக மக்கள் சந்திப்பு நடைபயணத்தை தொடங்கினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

Velmurugan s  | Published: Feb 8, 2024, 7:04 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையை 91 வது நாளாக இன்று 190 வது தொகுதியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலைக்கோயில் அடிவாரத்தில் இருந்து என் மண் என் மக்கள் மக்கள் சந்திப்பு நடை பயணத்தை தொடங்கினார்.  திரளான இவரது தொண்டர்கள் உடன் தொடங்கினார்

இந்நிகழ்வில் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக கரகாட்டம், பம்பை மேளம், கேரள சண்டி மேளம், புலி ஆட்டம், பொய்க்கால் குதிரை, போன்ற நிகழ்வுடன் பூக்கள் தூவி உற்சாகமாக நடை பயணத்தை பாஜக தலைவர் அண்ணாமலை திருத்தணி நகரத்தில் தொடங்கியுள்ளார்.

Read More...

Video Top Stories