Viral video : மனைவியுடன் சண்டை! - குடிபோதையில் டிரான்ஸ்பார்மரில் ஏறி உயர்மின் அழுத்த கம்பியை கடித்த கணவன்!

திருவள்ளூர் அருகே கட்டிய மனைவியுடன் சண்டையிட்ட கணவன், குடிபோதையில் டிரான்பார்மரில் ஏறி உயர் மின் அழுத்த கம்பியை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

Share this Video

திருவள்ளூர் மாவட்ட், சின்னமாங்கோடு பகுதியைச் சேர்ந்த தர்மதுரை, மனைவியிடம் சண்டை போட்டுக்கொண்டு, மனமுடைந்து ரெட்டிபாளையத்திற்கு வந்துள்ளார்.

ரெட்டிபாளையத்திற்கு வந்த தர்மதுரை குடிபோதையில், காவல்துறையிடம் புகார் அளிக்க முயன்றுள்ளார். போலீசார் காத்திருப்பு அறையில் உட்காரச் சொன்னதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆனதால், அவர் திடீரென காவல் நிலைய வளாகத்தை விட்டு வெளியேறி கட்டிடத்தின் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறியுள்ளார்.

காவல்துறையினர், பொதுமக்கள் என அனைவர் கூறியும் டிரான்ஸ்பாரமில் இருந்து இறங்க மறுத்த, தர்மதுரை, உயர் அழுத்த மின் வயரை கடித்துள்ளார். உடனே மின்சாரம் தாக்கப்பட்டு கீழே விழுந்த தர்மதுரை எளாவூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் தற்போது பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Video