பைனான்ஸ் ஊழியரின் அரைகுறை பயிற்சியால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் விபத்து
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நிதிநிறுவன ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம் அதிவேகமாக சென்று மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த மங்கரசுவளைய பாளையம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் அவிநாசி, திருப்பூர் சாலையில் உள்ள வண்ண கூறை தகடு உற்பத்தி செய்யும் கம்பெனியில் சரக்கு வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று ஆட்டையம்பாளையம் அருகில் வேனை நிறுத்தி டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, தனியார் நிதி நிறுவன மேலாளர் வீரமணி, நிதி நிறுவன ஊழியர் கிருஷ்ணன் மற்றும் முருகேஷ் ஆகிய மூவரும் குமரேசனிடம் பணத்தை கட்டச் சொல்லி பேசி உள்ளனர்.
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சோலார் கார் பந்தயத்தில் சீறிப் பாய்ந்த கார்கள்
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில், முருகேஷ் என்பவர் அத்து மீறி வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாக கோவை சாலையில் அவிநாசி நோக்கி வந்துள்ளார். அப்போது அதிவேகத்தின் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, மேட்டுப்பாளையம் சாலையில் இருந்த மைய தடுப்பு மீது ஏறி அவிநாசி நோக்கி வந்த மினி சரக்கு வேன் மீது மோதியது.
Watch : மாணவிகளுக்கு ஈவ்டீசிங் தொல்லை! - "நானும் ரவுடி தான்" என வசனம் பேசிய நபர் கைது!
இதில் மினி சரக்கு வேன் சாலையோரம் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த அவிநாசி போக்குவரத்து காவல் துறையினரின் வாகனத்தின் பின் பகுதியில் லேசாக உரசியது. இந்த விபத்தில் மினி சரக்கு வேன் ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. வேன் கட்டுப்பாட்டை இழந்து வருவதை கண்ட போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் வேகமாக ஒதுங்கி ஓடி உயர் தப்பினர். இந்த விபத்து குறித்து அவிநாசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.